×

புதுக்கோட்டையில் ரூ. 67.83 கோடி செலவில் அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் ரூ.67.83 கோடி செலவில் தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையான புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.8.89 கோடி செலவில் பொது சுகாதாரத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 27 புதிய கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த கல்லூரியில் 2023-2024 ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாக கட்டிடம், மாணவ மாணவிகள் விடுதி கட்டிடம், ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமணைக்கு ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பிலான தேவையான அதிநவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான ஆசிரியர், நிர்வாகம் மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன், எம்பிக்கள் கே.நவாஸ் கனி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏக்கள் வி.முத்துராஜா, எம்.சின்னதுரை, புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் ரூ. 67.83 கோடி செலவில் அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Rs ,Government Dental College and Hospital ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,
× RELATED நாகமலை புதுக்கோட்டை அருகே நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது