×

ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி: பிரியங்கா

போபால்: பாஜ.வை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி பேசினார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இதன் சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இங்கு ஆளும் பாஜ, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான இருமுனை போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருந்த நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், தாதியா தொகுதி வேட்பாளருக்காக ஆதரவு திரட்டும் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசிய போது, “உங்களுக்கு சிந்தியா ஜியை தெரியுமா? அவரை மகாராஜா என்று அழைத்து பழக்கமில்லை. ஆனால் தொண்டர்கள் அவரை மகாராஜா என்று அழைத்தால் தான் நமது வேலைகளை முடித்து கொடுப்பார் என்று கூறுவதுண்டு. குடும்ப பாரம்பரியத்தை அவர் நன்றாக பின்பற்றி உள்ளார். குவாலியர், சம்பல் பகுதி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் ஆட்சியை கவிழ்த்து விட்டார்,” என்று கடுமையாக தாக்கி பேசினார்.

The post ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி: பிரியங்கா appeared first on Dinakaran.

Tags : Jyotiraditya Scindia ,Priyanka ,Bhopal ,Union Minister ,Priyanka Gandhi ,
× RELATED விமானம் தரையிறங்கிய பிறகு பயணிகளின்...