×

வீலிங் சாகசம் 3 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கோல்டன் நகரை சேர்ந்தவர் முகமது இர்பான் (19). இவர், தீபாவளியன்று மருத்துவ கல்லூரி சாலையில் பதிவெண் இல்லாத பைக்கின் முன்பகுதியில் வானில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசு கட்டி அதை பற்ற வைத்து வீலிங் செய்தபடி சாகசம் செய்து, வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்தார். இதேபோல் புதுக்கோட்டை ஏதினிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24), அன்னவாசலில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் தனது பைக்கில் வீலிங் சாகசம் செய்தபடி ஓட்டியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், திருப்பூர் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் கோவை-சேலம் பைபாஸ் ரோட்டில் நேற்று முன்தினம் பைக் சாகசத்தில் ஈடுபட்ட அவிநாசி, திருமுருகன்பூண்டியை சேர்ந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் துரைராஜ் (23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post வீலிங் சாகசம் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Mohammad Irfan ,Pudukottai Golden City ,Diwali ,Dinakaran ,
× RELATED பயனாளிக்கு இழப்பீடு தொகை வழங்காததால்...