×

ஒவ்வொரு நாய் கடி அடையாளத்திற்கும் ரூ.10,000 இழப்பீடு: பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு கடி அடையாளத்திற்கும் தலா 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சண்டிகர், பஞ்சாப், அரியானாவில் நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பஞ்சாப் – அரியான உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ் அளித்த தீர்ப்பில், ‘நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாயின் ஒரு பல் பட்ட இடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் 0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

தெரு விலங்குகள் அல்லது நாய்கள் கடித்தால் அதற்கு அரசாங்கம் தான் இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 193 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன். தனி நபர்களின் நாய் கடித்தால் அவர்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. தகுந்த ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு கோரிக்கைகள் நான்கு மாத காலத்திற்குள் இந்த இழப்பீடு கமிட்டிகளால் நிறைவேற்றப்படும். இழப்பீடு செலுத்துவதற்கு முதன்மையான பொறுப்பை மாநில அரசு ஏற்க வேண்டும்.

பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுகான இழப்பீட்டை தீர்மானிப்பதற்காக, அந்தந்த மாவட்ட அளவில் துணை ஆணையர்கள் தலைமையில் குழுக்களை அமைக்க வேண்டும். அடுத்த நான்கு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.

The post ஒவ்வொரு நாய் கடி அடையாளத்திற்கும் ரூ.10,000 இழப்பீடு: பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Punjab iCourt ,New Delhi ,Punjab High Court ,Dinakaran ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு