×

காய்ச்சல் பரவாமல் தடுக்க நாலாட்டின்புதூரில் விழிப்புணர்வு கூட்டம்

கோவில்பட்டி, நவ. 15: வடகிழக்கு பருவமழையினால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், நாலாட்டின்புதூரில் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கடல்ராணி அந்தோணிராஜ் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் செல்லையா மற்றும் அதிகாரிகள் பங்கேற்று வீடு, வீடாகச் சென்று தண்ணீரில் டெங்கு கொசு புழுக்கள் இருக்கிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பஞ்சாயத்தில் அனைத்து பகுதிகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. கொசு மருந்தும் அடிக்கப்பட்டன.

The post காய்ச்சல் பரவாமல் தடுக்க நாலாட்டின்புதூரில் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Naladinputhur ,Kovilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...