×

குடும்ப பிரச்னையில் ஒருவர் தற்கொலை

 

கமுதி, நவ.15: கமுதி அருகே பூமாவிலங்கையை சேர்ந்தவர் முனியசாமி(48). இவரது மனைவி வள்ளி(45). இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முனியசாமி அப்பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில், உள்ள புளிய மரம் ஒன்றில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முனியசாமியின் மனைவி வள்ளி கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்ப பிரச்னையில் ஒருவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Muniyasamy ,Valli ,
× RELATED சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா