×

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் வேறு தேதிக்கு மாற்றம்

 

திருப்பூர், நவ.15: திருப்பூர் மாவட்டத்தில் வரும் 18 மற்றும் 19-ம் தேதி நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் 25, 26-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் 1-1-2023 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்காக சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி, முதன்மை அரசு செயலாளர் ஆகியோரின் அறிவுரைகளின்படி வரும் 18 மற்றும் 19-ம் தேதி நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களை சேர்த்துக்கொள்ளலாம். இதுபோல திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், குடியிருப்பு மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் www.https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் வேறு தேதிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்