×

மழை விடுமுறை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை நீடிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 35 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால், பெரும்பாலான மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால், மழை முடியும் வரையில் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மழை முடியும் வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், மழைக்கு பிறகு பள்ளிகள் இயங்கும்போது, மழை விடுமுறைகளை ஈடுசெய்யும் விதமாக சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளனர். இதையடுத்து, இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

The post மழை விடுமுறை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா