×

ம.பி.யில் பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்கள், மூத்த குடிமக்களுக்கு இலவச அயோத்தி பயணம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

ரட்லாம்: மத்தியப்பிரதேசத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்கள், மூத்த குடிமக்கள் இலவசமாக அயோத்திக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் ரட்லாம் மாவட்டத்தில் ஜவ்ரா தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் 2024ம் ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. உங்களை அழைப்பதற்காக தான் நான் இங்கே வந்தேன். மத்தியப்பிரதேசத்தில் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் இலவசமாக அயோத்தி ராமர்கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்” என்றார்.

The post ம.பி.யில் பாஜ ஆட்சிக்கு வந்தால் பெண்கள், மூத்த குடிமக்களுக்கு இலவச அயோத்தி பயணம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,BJP ,Minister ,Rajnath Singh ,Ratlam ,Madhya Pradesh ,
× RELATED அயோத்தி கோயிலுக்கு 800 பக்தர்கள் பயணம்