×

ம.பி தேர்தல் பிரசாரத்தில் ஆவேசம் ராகுல்காந்தியை விமர்சித்த அகிலேஷ்

போபால்: உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மத்திய பிரதேச மாநிலம் சட்னாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்களின் ‘எக்ஸ்-ரே’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரது கருத்து விநோதமாக இருக்கிறது. ‘எக்ஸ்-ரே’ என்பது அந்தக் காலத்தில் தேவைப்பட்டது. தற்போது எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதிகள் வந்துவிட்டன. தற்போது சமூகத்தில் பலவித நோய் பரவி விட்டது. இந்தப் பிரச்னையை அப்போதே தீர்த்திருந்தால், இவ்வளவு இடைவெளி இருந்திருக்காது. ‘எக்ஸ்-ரே’ பற்றி பேசுபவர்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தடுத்து நிறுத்தியவர்கள் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தற்போது காங்கிரஸ் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளதற்கு முக்கிய காரணம், அவர்களின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. தங்களிடம் வாக்கு சதவீதம் இல்லை என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ம.பி தேர்தல் பிரசாரத்தில் ஆவேசம் ராகுல்காந்தியை விமர்சித்த அகிலேஷ் appeared first on Dinakaran.

Tags : Akhilesh ,Rahul Gandhi ,Bhopal ,Uttar Pradesh ,Chief Minister ,Samajwadi Party ,Akhilesh Yadav ,Satna, Madhya Pradesh ,
× RELATED மக்களவை தேர்தலில் காங்கிரஸ்,...