×

ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் மீண்டும் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(71) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதும் வேறொரு வழக்கில் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் தோஷகானா ஊழல் வழக்கு, அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்குகளில் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து 2 வழக்குளில் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

The post ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் மீண்டும் கைது appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Pakistan Tehreek-e-Insaf Party ,Pakistan ,Dinakaran ,
× RELATED வன்முறை குறித்த 2 வழக்குகளில் இம்ரான் கான் விடுவிப்பு