×

மாணவர்களின் P.E.T பீரியட்களை கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களின் P.E.T பீரியட்களை கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீங்க என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழக அரசு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கும் கேடயம், பரிசுகள் வழங்ப்பட்டன

இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், பள்ளி மாணவர்களின் P.E.T பீரியட் வகுப்புகளை கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என பள்ளி மாணவர்களின் விளையாட்டு முக்கியத்துவம் பற்றி கலகலப்பாக பேசினார்.

மேலும், நீங்கள் உங்கள் கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளை கூட மாணவர்கள் விளையாட்டுக்காக அனுமதிக்கலாம் என்றும், அதன் மூலம் மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்றால் அரசு பள்ளிகளுக்கு அதிக கேடயங்கள் கிடைக்கும் என விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசினார். இதனை அடுத்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், 114 அரசு பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது என்றும், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 180 அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்ப்பட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post மாணவர்களின் P.E.T பீரியட்களை கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்காதீங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற...