×

ஊட்டி சுற்று வட்டாரத்தில் மழையால் விவசாய பணிகள் துவக்கம்

ஊட்டி : ஊட்டியில் அண்மையில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் நிலங்களை சமன்படுத்தி விவசாய பணிகளை துவக்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், தற்போதும் தேயிலைக்கு அடுத்தப்படியாக நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாகவும், பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய ஒரு அங்கமாகவும் காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது. தற்போது சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 5 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்த நிலையில் இதனை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் நிலங்களை சமன்படுத்தி அதில் காளான் கழிவுகளை கொட்டி மண்ணை வளப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் நாட்களில் மழை பொழிவின் அடிப்படையில் விதைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதேபோல ஏற்கனவே பயிரிட்டு அறுவடைக்கு தயராக உள்ள கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களுக்கு மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மருந்துகளை தெளித்து வருகின்றனர்.

The post ஊட்டி சுற்று வட்டாரத்தில் மழையால் விவசாய பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty district ,Ooty ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் வரலாறு காணாத சூறாவளி காற்று வீசியது