×

திங்கள்சந்தையில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்

*கட்டுப்படுத்த கோரிக்கை

திங்கள்சந்தை : திங்கள்நகர் பஸ் ஸ்டாண்ட், சந்தை உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்த பகுதியில் சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்கள் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள், பயணிகள் என்று அனைவரும் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

தெருக்களில் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் இவை பொதுமக்களை கடித்து காயப்படுத்தினால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் எச்சில் இலைககளை பொது இடங்களில் இழுத்து வருவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதேபோன்று தெரு நாய்கள் வாகனங்கள் குறுக்கே வந்து விழுவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே தெரு நாய்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திங்கள்சந்தையில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள் appeared first on Dinakaran.

Tags : market ,Dingalshanthi ,Dingalnagar ,Dinakaran ,
× RELATED இரணியலில் போதையில் பைக் ஓட்டிய 4 பேர் மீது வழக்குப்பதிவு