×

தீபாவளி முடிந்தும் ஆபர் ஜவுளி விற்பனை ஜோர்: ஈரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: தீபாவளியையொட்டி ஈரோடு மாநகர பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ரோட்டோரத்தில் கடைகள் அமைத்தும் வியாபாரம் செய்தனர். தீபாவளி முடிந்தால் நேற்று மக்கள் கூட்டம் குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் ஆர்.கே.வி. சாலையில் உள்ள சில ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள சில ஜவுளி கடைகளில் நேற்றும் மலிவு விலையில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன. 5 சர்ட் ரூ.1,000 எனவும், 3 பேன்ட் ரூ.1,000 எனவும் இந்த கடைகளில் விற்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலை முதலே தள்ளுபடி விலையில் ஜவுளிகள் வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டு போட்டி போட்டு துணிகளை வாங்கி சென்றனர்.

மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடைவீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, சாலையோர கடைகளிலும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்ட காலணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் திரண்டது. இதுபற்றி விசாரித்தபோது, தீபாவளியையொட்டி ‘ஸ்டாக் கிளியரன்ஸ்‘ செய்வதற்காக சில கடைக்காரர்கள் இதுபோன்று மலிவு விலையில் ஜவுளிகளை விற்பனை செய்வதுண்டு. அந்த வகையில்தான் நேற்று தீபாவளிக்கு மறுநாளும் இந்த விற்பனை நடந்தது என தெரியவந்தது.

 

The post தீபாவளி முடிந்தும் ஆபர் ஜவுளி விற்பனை ஜோர்: ஈரோட்டில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Afar ,Erode ,Rotoram ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...