×

100% நுரையீரல் தொற்று பாதிப்புள்ள கோவிட் நோயாளிக்கு வெற்றிகரமான சிகிச்சை: காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை நிபுணரும், கிரிட்டிக்கல் கேர் துறையின் தலைவருமான டாக்டர் ஸ்ரீதர், இந்த சிகிச்சை குறித்து கூறுகையில்: நெல்லூரைச் சேர்ந்த 35 வயதான இந்நோயாளிக்கு கடுமையான கோவிட் தொற்று  பாதிப்பு கண்டறியப்பட்டது. 100 சதவீதம் நுரையீரல் பாதிப்பு, சிடி ஸ்கேன்  சோதனை 25/25 என்ற பாதிப்பின் அளவினை வெளிப்படுத்தியிருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்நோயாளி இங்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.சிகிச்சையின் முதல் வாரத்திலேயே சுவாசிப்பதற்கு அவரது கழுத்தின் முன்புறத்தில் ஒரு கீறலிடப்பட்டு, மூச்சுக்குழாயோடு ஒரு டியூப் இணைக்கப்படும் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. 100% நுரையீரல் பாதிப்படைந்திருந்த சில நோயாளிகளுக்கு நாங்கள் அளித்த சிகிச்சையில் அவர்கள் சிறப்பாக உடல்நலம் தேறியிருக்கின்றனர். ஆனால், இந்த நோயாளியின் குணமடைதலை தனிச்சிறப்பானதாக ஆக்கியிருப்பது, வெண்டிலேட்டரிலிருந்து அவர் வெளியில் வந்த வேகமே. மருத்துவமனைக்கு வந்த உடனேயே உடனடியாக வெண்டிலேட்டரின் கீழ் அவர் வைக்கப்பட்டார். உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு குறைவு என்று அவரது குடும்பத்தினருக்கு நாங்கள் சொல்ல வேண்டியிருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோதும், அவரது சொந்த ஊரிலிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு 4 மணிநேரங்களுக்கு ஆபத்தான பயணத்தை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு டாக்டர் ஸ்ரீதர் கூறினார். இதற்காக டாக்டர் ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பாராட்டு தெரிவித்தார். …

The post 100% நுரையீரல் தொற்று பாதிப்புள்ள கோவிட் நோயாளிக்கு வெற்றிகரமான சிகிச்சை: காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kaveri hospital ,Chennai ,Dr. ,Sreedhar ,Chennai Cauvery Hospital ,Cauvery Hospital ,
× RELATED காவேரி மருத்துவமனையில் அறுவை...