×

சச்சினா, கோஹ்லியா யார் பெஸ்ட்? டிவில்லியர்ஸ் பளிச் பதில்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49 சதத்தை விராட் கோஹ்லி அண்மையில் சமன் செய்து மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் மாஜி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது: 49 சதத்தை எடுத்து விராட் கோஹ்லிக்கு வெறும் 277 இன்னிங்ஸ் தான் தேவைப்பட்டிருக்கிறது. இது மிகவும் விரைவானது என்று நான் நினைக்கிறேன். இது புதிய தலைமுறைக்கு சாதாரணமாக தெரிந்தாலும், இது மின்னல் வேகத்தில் நடந்திருக்கிறது. கோஹ்லியும் நானும் அண்ணன் தம்பி போன்றவர்கள் நாங்கள் மிகவும் உற்ற நண்பர்களாக இருக்கிறோம்.

விராட் கோஹ்லிக்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். விராட் கோலி சிறந்தவரா? சச்சின் சிறந்தவரா? என்று விவாதம் எழுகிறது. இந்த இரண்டு வீரர்களின் நம்பர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஏனென்றால் விராட் கோஹ்லி விளையாடியது புதிய பரிணாமம். ஆனால் சச்சின் செய்திருப்பது அந்த காலத்தில் என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் பல விதிகள் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் நம்பர் படி பார்த்தால் 451 இன்னிங்சில் சச்சின் செய்திருக்கிறார். விராட் 277 இன்னிங்சில் செய்திருக்கிறார். இது நிச்சயம் அதிவேகமான சாதனைதான். ஆனால் இந்த காலகட்டத்தில் கிரிக்கெட் விதிகள் முற்றிலும் மாறி இருக்கிறது. அப்போதெல்லாம் 250 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறலாம்.

ஆனால் இப்போதுள்ள சூழலில் நல்ல ஆடுகளத்தில் 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் ரசிகர்கள் சிரித்து விடுவார்கள். ஏனென்றால் அனைவருமே 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். கோஹ்லியிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அவர் யாருடைய சாதனையை உடைத்தாலும், இல்லை இல்லை நான் அவரை விட சிறந்தவர் கிடையாது என்று கூறுவார். அது உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம். அது பிரச்சனை கிடையாது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது விராட் கோஹ்லி தற்போது 49 சதத்தை அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்துவிட்டார் என்றார்.

The post சச்சினா, கோஹ்லியா யார் பெஸ்ட்? டிவில்லியர்ஸ் பளிச் பதில் appeared first on Dinakaran.

Tags : Sachina ,Kohlia ,DeVilliers ,Mumbai ,Virat Kohli ,Sachin Tendulkar ,Dinakaran ,
× RELATED படைக்கப்படும் சாதனைகள்...