×

கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம் புத்தாடை, பட்டாசு விற்பனை அமோகம்

 

திருவண்ணாமலை கடை வீதிகளில், தீபாவளி பண்டிகை பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அதனால், தேரடி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கடந்த சில நாட்களாகவே பொதுமக்களிடம் தீபாவளி பண்டிகைக்கான உற்சாகம் காணப்படுகிறது. பட்டாசு, புத்தாடைகள், பரிசு பொருட்கள், இனிப்புகள், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பட்டாசு கடைகள் அமைக்க இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, நகர பகுதிகளில் பட்டாசு கடைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நகருக்கு வெளியே பட்டாசு கடைகள் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. அதேபோல், அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கோர்ட் வழிகாட்டுதலின் அடிப்படையில் அரசு அறிவித்திருக்கிறது.

The post கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம் புத்தாடை, பட்டாசு விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Diwali ,Theradi Road ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...