×

இலங்கை வாரியம் சஸ்பெண்ட்

துபாய்:  இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அந்தஸ்தை இடைநீக்கம் செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் பறிகொடுத்தது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்படுவதாக அறிவித்த அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும், இந்நடவடிக்கைக்கு இலங்கை நீதிமன்றம் 2 வார தடை விதித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஐசிசி விதிமுறைகளை மீறும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரிய செயல்பாடுகளில் அந்நாட்டு அரசின் தலையீடு இருப்பதால், இலங்கையின் உறுப்பினர் அந்தஸ்தை இடைநீக்கம் செய்வதாக ஐசிசி நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

The post இலங்கை வாரியம் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka board ,Dubai ,International Cricket Council ,ICC ,Sri Lankan Cricket Board ,
× RELATED துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி