×

ம.பி.யில் உமாபாரதியின் தொகுதியை வெல்லப் போவது யார்?: பாஜகவுக்கு எதிராக பெண் சாமியாரை களமிறக்கிய காங்கிரஸ்..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தின் மல்ஹாரா சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருக்கு எதிராக பெண் சாமியாரை காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் வளம் வரும் காங்கிரஸ் வேட்பாளரான பெண் சாமியார், சாத்வி ரம்சியா பாரதியின் பரப்புரை தொகுதி மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மல்ஹாரா தொகுதி ஏற்கனவே ஒரு பெண் சாமியாரை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்துள்ளது. 2003 தேர்தலில் மல்ஹாராவில் வென்ற பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தொடர்ந்து முதலமைச்சராகவும் பதவி ஏற்றார்.

அரசியலில் இருந்து உமாபாரதி ஓய்வு பெற்றாலும் தொகுதி முழுக்க அவரது தாக்கம் எதிரொலிக்கிறது. பாஜக வேட்பாளரான பிரத்யுமன் சிங் லோதி, பரப்புரை சுவரொட்டிகளில் பிரதமர் மோடி, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் படங்களை விட பெரிதாக உமாபாரதியின் படங்களையே பயன்படுத்துகிறார். சாத்வி ரம்சியாவோ காவி உடை தரித்து நெற்றி குங்குமத்துடன் உமா பாரதி தோற்றத்துடலேயே வளம் வருகிறார். லோதி சமூகத்தை சேர்ந்த இருவரும் சத்ரபூர் மாவட்டத்தில் ஆன்மீக தலைவர்களாக அறியப்பட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளில் ஆன்மீக உரையாற்றுகிற சாத்வி ரம்சியா, பரப்புரையில் பாஜக பாணியை பின்பற்றுகிறார். குறிப்பாக ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாக்கு ஜே முழக்கங்கள் இல்லாத அவரது உரைகளே இல்லை எனலாம். பாஜகவின் இந்து பாசம் தேர்தலுக்கானது என்று சாத்வி கூறுகிறார். எல்லா சாமியாரும் உமாபாரதி கிடையாது என்று பாஜக வேட்பாளர் தெரிவிக்கிறார்.

The post ம.பி.யில் உமாபாரதியின் தொகுதியை வெல்லப் போவது யார்?: பாஜகவுக்கு எதிராக பெண் சாமியாரை களமிறக்கிய காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Uma Bharati ,Congress ,BJP ,Bhopal ,Madhya Pradesh ,Malhara assembly ,
× RELATED காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார் விஜயதரணி?