×

1000 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, நவ.10: சென்னை மாநகராட்சியில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு உள்பட அனைத்து கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை மாநகராட்சியில், அக்டோபர் மாத மாமன்ற கூட்டம் அண்மையில் நடந்தது. இதில், மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சென்னையில் கட்டிட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 1,000 சதுர அடிக்கு மேல் வீடுகள், கட்டிடங்கள் கட்டினால் அனுமதி கட்டணம் 100% வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம், தொழிற்சாலைகளின் தளப்பரப்பில் 100 சதுர மீட்டருக்கு (1,076 சதுர அடி) மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணம்: குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களுக்கு முறையே முதல் 40 சதுர மீட்டர், 10 சதுர மீட்டருக்கு ரூ.90, 41 முதல் 100 சதுர மீட்டர், 10 சதுர மீட்டருக்கு ரூ.155, 101 முதல் 400 சதுர மீட்டர், 10 சதுர மீட்டருக்கு ரூ.410, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல், 10 சதுர மீட்டருக்கு ரூ.1050 வசூல் செய்யப்பட்டு வந்தது.

புதிய கட்டணம்: குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களுக்கு முறையே முதல் 40 சதுர மீட்டர், 10 சதுர மீட்டருக்கு ரூ.180, 41 முதல் 100 சதுர மீட்டர், 10 சதுர மீட்டருக்கு ரூ.310, 101 முதல் 400 சதுர மீட்டர், 10 சதுர மீட்டருக்கு ரூ.820, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல், 10 சதுர மீட்டருக்கு ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கும், அதே குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.210, ரூ.370, ரூ.920 மற்றும் ரூ.2,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.230 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் ரூ.105 ஆக இருந்த நிலையில், இரு மடங்காக உயர்த்தப்பட்டு, ரூ.230ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பழைய கட்டணம்
குடியிருப்பு கல்வி கட்டிடம் கட்டணம்
முதல் 40 சதுர மீட்டருக்கு 10 சதுர மீட்டருக்கு ₹90
41 முதல் 100 சதுர மீட்டருக்கு 10 சதுர மீட்டருக்கு ₹155
101 முதல் 400 சதுர மீட்டருக்கு 10 சதுர மீட்டருக்கு ₹410
401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு ₹1,050
புதிய கட்டணம்
முதல் 40 சதுர மீட்டருக்கு 10 சதுர மீட்டருக்கு ₹180
41 முதல் 100 சதுர மீட்டருக்கு 10 சதுர மீட்டருக்கு ₹310
101 முதல் 400 சதுர மீட்டருக்கு 10 சதுர மீட்டருக்கு ₹820

The post 1000 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது...