×

பெரியமிளகுபாறையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

 

திருச்சி, நவ.10: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியமிளகுபாறை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் அங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்வோரை கடிப்பது போன்ற செய்கையில் குறைத்தபடி துரத்துவதால் சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர்.

வாகனங்களில் செல்வோர் விபத்துக்களை சந்திக்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் வேலை முடிந்து செல்வோரை கூட்டமாக சேர்ந்து கொண்டு நாய்கள் துரத்துவதால் ஒருவித அச்சத்துடன் செல்லவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாநகராட்சி ஊழியர்கள், இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியமிளகுபாறையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Periyamilakuparai ,Trichy ,Trichy Central Bus Station ,Municipal Corporation ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து