×

தீபாவளிக்கு அனைத்து அதிகாரிகளும் ரோந்து செல்ல உத்தரவு

 

ஈரோடு, நவ.10: தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இரவு ரோந்தில் ஈடுபட வேண்டும் என்று எஸ்பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்பி ஜவகர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாநகர் பகுதிகளில் 16 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுபோல் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இரவு ரோந்தில் ஈடுபட எஸ்பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

தீபாவளியை பண்டிகையால் சமீப காலமாக குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன. எனவே, இந்த ஒரு வாரமும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இரவு ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுபோல் குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு போலீசார் அதிகமாக ரோந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தீபாவளிக்கு அனைத்து அதிகாரிகளும் ரோந்து செல்ல உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Erode ,SP ,Jawahar ,Dinakaran ,
× RELATED போக்சோ, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு