×

கோவையில் குழந்தையின் ஷூக்குள் புகுந்த பாம்பு மீட்பு

 

கோவை, நவ. 10: கோவை வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (12). 8-ம் வகுப்பு மாணவன். இவர், பள்ளி முடிந்து நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டிற்கு சென்று தனது ஷூவை வீட்டில் உள்ள காலணி ஸ்டாண்டில் வைத்துள்ளார். பின்னர், இரவு ஷூ-வின் உள்ளே இருந்து பாம்பு சீரும் சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து ஷூவுக்குள் பிரதீப் பார்த்த போது, அதில் பாம்பு ஒன்று மறைந்து இருந்தது.

இதையடுத்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் மோகன், ஷூவில் ஒளிந்திருந்த பாம்பை பிடித்தார். பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் வனத்துறையின் உதவியுடன் பாதுகாப்பாக விடப்பட்டது.

இது குறித்து பாம்பு பிடி வீரர் மோகன் கூறுகையில்,“மழைக்காலத்தில் பாம்புகள் வெளியில் உலா வரும் போது கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம். அதன் அடிப்படையில் தான் ஷூ ரேக்குள், ஷூ உள்ளே பாம்பு புகுந்துள்ளது. நகர்ப்புறமாக இருந்தாலும் பொதுமக்கள் இது போன்ற காலங்களில் கவனமாக இருப்பது அவசியம். தங்கள் உடமைகளை பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். பாம்பு இருப்பது தெரியவந்தால், பாம்பு பிடி வீரர்கள் அல்லது வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்’’ என்றார்.

The post கோவையில் குழந்தையின் ஷூக்குள் புகுந்த பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pradeep ,Venkateswara Nagar ,Vellalur, Coimbatore ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்