×

மாணவரை ஆபாச வீடியோ எடுத்து ராகிங் மேலும் ஒரு மாணவருக்கு போலீஸ் வலை வீச்சு

கோவை: கோவை அவினாசி ரோடு பீளமேட்டில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் 2ம் ஆண்டு பொறியியல் பட்ட படிப்பு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு அந்த மாணவர் தனது விடுதி அறையில் இருந்த போது அதே விடுதியில் தங்கி படித்து வரும் சில மாணவர்கள், மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, தங்கள் அறைக்கு அழைத்துசென்று சரமாரியாக தாக்கி மாணவரின் தலையை மொட்டை அடித்து நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் பீளமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ராகிங்கில் 3ம் ஆண்டு படித்து வரும் வெங்கடேசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர் மீதும் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மாணவரை ஆபாச வீடியோ எடுத்து ராகிங் மேலும் ஒரு மாணவருக்கு போலீஸ் வலை வீச்சு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Avinasi, Tirupur district ,Coimbatore, Avinasi Road, Beelamet ,
× RELATED முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது