×

2 ஏக்கர் பரப்பளவில் தேனி வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும்

 

தேனி, நவ. 9: தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் 2 ஏக்கரில் புதிதாக கடைகள் கட்டி வாரச்சந்தையை மேம்படுத்த நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய வாரச்சந்தைகளில் புகழ்மிக்க சந்தையாக தேனி வாரச்சந்தை உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கரில் இந்த வாரச்சந்தையில் காய்கறிக்கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சந்தைப்பகுதியில் மரக்கடைகள், மற்றும் வாரச்சந்தைக்கு சம்பந்தமில்லாத பல்வேறு கடைகள் கட்டப்பட்டது. இதனால் வாரச்சந்தைக்கு இடம் போதாமல் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகுதியில் வாரச்சந்தை குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

இதனால் வாரச்சந்தையை விரிவுபடுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் வாரச்சந்தையை விரிவு படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, தேனி-அல்லிநகரம் நகர்மன்ற சேர்மன் ரேணுபிரியாபாலமுருகன் தலைமையில் நடந்த சாதாரண கூட்டத்தில், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமாக வாரச்சந்தை பகுதியில் உள்ள 2 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை உள்கட்டமைப்புகளும், மீதமுள்ள இடத்தில் வணிக கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு நகரட்சிக்கான வருமானத்தை ஈட்ட தமிழக அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று சந்தையை மேம்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலம் அரசுக்கு கருத்துரு அனுப்ப நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post 2 ஏக்கர் பரப்பளவில் தேனி வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Theni ,Warachanda ,Teni-Allinagaram ,Dinakaran ,
× RELATED கூடலூர் நகராட்சியில் நிர்வாக மண்டல இயக்குநர் ஆய்வு