×

கவுன்சிலர் தலைமையில் மக்கள் சாலை மறியல்

சேலம், நவ.9: சேலம் சிவதாபுரம் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இந்நிலையில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் தலைமையில் நேற்று மதியம் சுமார் 12மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் சமாதானமடைந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post கவுன்சிலர் தலைமையில் மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Sivathapuram ,Dinakaran ,
× RELATED மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்