×

மாத்தூர் சாலையில் தலை சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

அழகர்கோவில், நவ. 9: அப்பன்திருப்பதியில் இருந்து மாத்தூர் செல்லும் சாலையோரம் சரிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அப்பன் திருப்பதி. இங்கிருந்து மாத்தூர் செல்லவதற்கான சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இச்சாலையோரம் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் ஒன்று தலைசாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமனாலும் சரிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை தொடர்கிறது. இதற்கிடையே, தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், அதிக அளவில் தண்ணீர் சேர்ந்தால் மின்கம்பம் சரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அதற்கு முன்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அதனை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

The post மாத்தூர் சாலையில் தலை சாய்ந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mathur ,Alagarkoil ,Appanthirupati ,Dinakaran ,
× RELATED சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர்...