×

எடப்பாடி தலைமையில் நவ. 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: அதிமுக கொடி மற்றும் கட்சி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி மாலை 4 மணிக்கு பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தி அதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

The post எடப்பாடி தலைமையில் நவ. 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,CHENNAI ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...