மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு கிடைத்த கொடை. அதிமுக பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்கள் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போல ஓபிஎஸ் செயல்படுகிறார். இந்த நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவை தெளிவான பாதையில் பயணம் செய்ய வைக்கும். அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய கதவு திறந்து இருக்கும். ஆனால், எதிரிகள், துரோகிகள் அதிமுகவில் இணைவதற்கான கதவு மூடப்பட்டுள்ளது’’ என்றார்.
The post எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுகவில் ‘டோர் க்ளோஸ்’: உதயகுமார் திட்டவட்டம் appeared first on Dinakaran.
