×

சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் அண்ணாமலைக்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? டென்ஷனான செல்லூர் ராஜூ

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும். பெரிய கோயில்களின் வருவாயில்தான் சிறு கோயில்கள் செயல்படுகின்றன. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் சொல்லுவார். அவர் சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? அறநிலையத்துறையில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் அண்ணாமலைக்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? டென்ஷனான செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : Shekharbabu ,Annamalai ,Sellur Raju ,Madurai ,Former ,AIADMK ,Minister ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்