விருதுநகர்: நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து, விருதுநகரில் இந்தியன் வங்கி முன்பு காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர் எம்பி அளித்த பேட்டி:நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடப்பு மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. உழைத்த பணத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.89 கோடி வரவேண்டும்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த வாரம் விருதுநகர் வருவதற்கு முன்பாக பணத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால், அவருக்கு எதிராக நானே கருப்புக்கொடி காட்டுவேன். இந்தியா கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கமல் வரவேண்டும். ராகுல் காந்தி யாத்திரையில் கலந்து கொண்ட கமல் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். ராகுல்காந்தி பிரதமரானால் ஜிஎஸ்டி வரிமுறை மாற்றப்படும். தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என்றார்.
The post 100 நாள் வேலை ஊதியம் வழங்காததை கண்டித்து ஒன்றிய நிதியமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டுவேன்: மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி appeared first on Dinakaran.
