ஜடேஜாவின் 5 விக்கெட் அறுவடைக்கு பிறகு பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணி முறைகேட்டில் ஈடுபடுவதாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு அந்த நாட்டின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமே பதிலடி தந்து விட்டார். ஆனாலும் விமர்சனங்கள் நிற்கவில்லை. இருந்தும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா ‘உலக கோப்பையில் இந்திய அணி டிஆர்எஸ் முறையை கையாளுவதில் முறைகேடு செய்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் ஆட்டங்களில் பயன் படுத்தப்பட்ட பந்துகளை ஆய்வு செய்ய வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய வேகம் முகமது ஷமி சமூக ஊடகத்தில், ‘இப்படி பேசுவதற்கு தயவு செய்து வெட்கப்படுங்கள். மடத்தனமாக பேசுவதற்கு பதில், விளையாடுவதில் கவனம் செலுத்துங்கள். கூடவே விளையாட்டை ரசியுங்கள், மகிழுங்கள். இது உள்ளூர் போட்டி அல்ல. ஐசிசி நடத்தும் போட்டி. உங்கள் வாசிம் அக்ரம் விளக்கம் தந்த பிறகும் நீங்கள் இப்படி பேசுவது அவரையும் நீங்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. நீங்கள் உங்களை புகழ்ந்தக் கொள்வதற்கு மட்டும் ஆர்வம் காட்டுகிறீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் டென்னிஸ் வீ ரர்கள் மட்டும் பங்கேற்கும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் போட்டி இத்தாலியின் டுரின் நகரில் நவ.12ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் இம்மாதம் 16, 21ம் தேதிகளில் இந்திய அணி குவைத், கத்தார் அணிகளுடன் மோத உள்ளது. இந்த ஆட்டங்கள் முறையே குவைத் மற்றும் புவனேஸ்வரத்தில் நடைபெற உள்ளன. அதனால் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவ.7 முதல் 24ம் தேதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
* தென் கொரியாவின் குவான்ஜூ நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அதில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஒரே ஒரு வீராங்கனை தன்யா ஹேமநாத் நேற்று முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார். உலக கோப்பைத் தொடரில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வரும் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பிரிவு ஐசிசி தரவரிசைப் பட்டியல்களிலும் முதல் இடத்தில் தொடர்கிறது.
புள்ளிகள், ரேட்டிங் அடிப்படையில் இந்தியா 6,290புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸி 4,318புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. அதேபோல் ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சிராஜ் ஆகியோர் முதல் இடத்தில் இருக்கின்றனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்களில் ஜடேஜா மட்டும் 10வது இடத்தில் உள்ளார்.
The post வெட்கப்படுங்கள் ராசா பாக் வீரரை வெளுத்த ஷமி appeared first on Dinakaran.