×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் நடத்த திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் 3வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 25க்கு முன்பாக முடிவடையும். தற்போது 5 மாநில தேர்தல் நடப்பதையொட்டி, குளிர்கால கூட்டத் தொடரை, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் டிசம்பர் 3ம் தேதிக்குப் பிறகு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இக்கூட்டத் தொடர் டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 25ம் தேதிக்கு முன்பாக முடிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

The post நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் நடத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Winter Session of Parliament ,New Delhi ,Parliament ,Winter Session ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...