×

ஊட்டி ரோஜா பூங்காவில் நடன நீரூற்று சீரமைப்பு

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் சீரமைக்கப்பட்ட செயற்கை நடன நீரூற்று ரசித்த சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டி ரோஜா பூங்காவிற்கு சென்று அங்குள்ள மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பூங்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நடன நீரூற்று அமைக்கப்பட்டது. இந்த நீரூற்று கோடைகாலங்களில் இயக்கும். இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த நீரூற்று கடந்த சில மாதங்களாக செயல்பட்டாத நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் சார்பில் செயற்கை நடன நீரூற்று சீரமைக்கப்பட்டு நாள் தோறும் தண்ணீர் விழும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் நீரூற்றை கண்டு ரசிப்பதுடன், அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

The post ஊட்டி ரோஜா பூங்காவில் நடன நீரூற்று சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty Rose Park ,Ooty ,
× RELATED ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகள் கவாத்து பணி துவக்கம்