×

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!!

துபாய்: ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறினார். விராட் கோலி 4வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 4வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டி தரவரிசையில் மிக வேகமாக நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்திய வீரர்களில் எம்எஸ்.தோனி(38 இன்னிங்ஸ்) முதலிடத்திலும், சுப்மன் கில்(41 இன்னிங்ஸ்) 2வது இடத்திலும் உள்ளனர்.

ஐசிசி தரவரிசையின் படி இந்திய அணி டி20, ஒருநாள், டெஸ்ட் மூன்று வடிவிலான ஆட்டங்களிலும் முதலிடத்தில் உள்ளது. மேலும் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முகமது சிராஜ் 709 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா 455 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் 370 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 879 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்திலும் ஜடேஜா 782 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

The post சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!! appeared first on Dinakaran.

Tags : India ,Dubai ,Subman Gill ,ICC ,Virat Kohli ,Rohit ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை