×

மாதந்தோறும் உயர்த்தப்படும் ஆட்டோ எல்பிஜி கேஸ் விலை: ஓலா, ஊபர் போல் அரசு செயலியை உருவாக்க ஓட்டுனர்கள் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கும் சூழலில் ஆட்டோ எல்.பி.ஜி. கேஸ் விலையும் கடந்த 3 மாதங்களில் ரூ.11 வரை உயர்ந்து இருப்பது வாடகை வாகன ஓட்டுனர்களை கவலையடைய செய்துள்ளது. சீரான கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓலா, ஊபரை போன்று அரசே செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு உகந்த எல்.பி.ஜி. கேஸை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக பலரும் எல்.பி.ஜி. கேஸ் வாகனங்களுக்கு மாற தொடங்கிய நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர், கேஸ் விலையோடு போட்டி போட்டுகொண்டு ஆட்டோ எல்.பி.ஜி. கேஸ் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.1.69 காசுகளும், அக்டோபரில் ரூ.6.11 காசுகளும், நவம்பர் 1ம் தேதி ரூ.3.04 காசுகள் என கடந்த 3 மாதங்களில் ரூ.11 வரை ஆட்டோ எல்.பி.ஜி. கேஸ் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலைக்கு நிகராக கேஸ் ரூ.86க்கு விற்கப்படுவதால் வாடகை வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கேஸ் விலை உயர்வை சமாளிக்க வாடகை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறுகின்றனர். சீரான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டுமானால் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களின் செயலி போன்று அரசே ஒரு செயலியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாதந்தோறும் உயர்த்தப்படும் ஆட்டோ எல்பிஜி கேஸ் விலை: ஓலா, ஊபர் போல் அரசு செயலியை உருவாக்க ஓட்டுனர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Auto LPG ,Uber ,CHENNAI ,Ola ,Dinakaran ,
× RELATED ஓலா, உபெர், வாடகை கார் உள்ளிட்ட அனைத்து...