×

அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

அசாம்: அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் டிஐஜி எஸ்டிஎஃப் பார்த்தசாரதி மஹந்தாவின் மேற்பார்வையில் சிறப்பு அதிரடிப்படைகுழு, கூடுதல் எஸ்பி கல்யாண் குமார் பதக் தலைமையிலான STF குழு வாகன சோதனையில் ஈடுபட்டது.

அப்போது மணிப்பூரில் இருந்து வந்த பொலிரோ பிக் அப் வேனை வழிமறித்து சோதனை செய்ததில் வாகனத்தின் ரகசியப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டது. இதில் 36 கிலோ எடையுள்ள 36 அபின் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. சஃபிகுல் அலி, மம்துல் அலி, ராஜு அஜ்லி, ஐனுல் ஹக் உள்ளிட்ட நான்கு நடைபாதை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

The post அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Assam ,Dinakaran ,
× RELATED காரில் கஞ்சா கடத்தி வந்த கேரளா கும்பல் சிக்கியது: 55 கிலோ கஞ்சா பறிமுதல்