×

ஈரோடு ரயில் நிலையத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது!!

ஈரோடு : ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் இருந்தவர்கள் வெளியே இறங்கிவிட்டதால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது.

The post ஈரோடு ரயில் நிலையத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது!! appeared first on Dinakaran.

Tags : Erode railway station ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்