×

மங்களூரில் இருந்து சேலம் வழியே சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

 

சேலம், நவ.8:தீபாவளி பண்டிகையையொட்டி மங்களூரில் இருந்து சேலம் வழியே சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இந்தவகையில், மங்களூரில் இருந்து சேலம் வழியே தாம்பரத்திற்கு ஒரு வழித்தட சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரயில் (06063) வரும் 12, 19, 26ம் தேதிகளில் இயக்கப்படுகிறது.மங்களூரில் காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காசர்கோடு, கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, திரூர், பாலக்காடு வழியே போத்தனூருக்கு மாலை 5.50க்கும், திருப்பூருக்கு மாலை 6.40க்கும், ஈரோட்டிற்கு இரவு 7.45க்கும் வந்து சேலத்திற்கு இரவு 9 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 2 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியே தாம்பரத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 5.10 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

The post மங்களூரில் இருந்து சேலம் வழியே சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Mangalore ,Chennai ,Salem ,Diwali ,
× RELATED சென்னை-மங்களூரு எக்ஸ்பிரசில் கூடுதல் ஏசி பெட்டி இணைப்பு