×

அம்பேத்கர் விருது 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: 2023-2024ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு வருகிற 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசால் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கப்படுகிறது. பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு, வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

2023ம் ஆண்டிற்கான விருது 2024ம் நிதியாண்டில் திருவள்ளுவர் திருநாளில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.5,00,000, விருது தொகையும், 8 கிராம் தங்கப்பதக்கமும், இதர செலவினங்களுக்கு ரூ.65,000 சேர்த்து என மொத்தம் ரூ.5,65,000 வழங்கப்படும். எனவே 2023-2024ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியான பட்டியலினத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் வருகிற 13ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அம்பேத்கர் விருது 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!