×

ஸ்ரீ நிகேதன் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணி, மாவட்ட உதவி அலுவலர் சுப்பிரமணி, பள்ளி தாளாளர் விஷ்ணுசரண், பள்ளி முதன்மை செயல் அலுவலர் பரணிதரன் ஆகியோர் மேற்பார்வையில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய செய்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் முன்னிலை வகித்தார். தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் ஞானவேல், நிலைய அலுவலர் (போக்குவரத்து) அழகர்சாமி, சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஹரிகிருஷ்ணன், தீயணைப்பு துறை பணியாளர்கள் சதீஷ், விநாயகமூர்த்தி, ரவிக்குமார், பரத், கார்த்திக் ஆகியோர் மாணவர்களுக்கு பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும் முறைகள் குறித்த நிகழ்ச்சியினை நடத்திக் காட்டினர்.

இந்தநிகழ்ச்சியில் மாணவர்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு முன்பாக தண்ணீரும், மணலும் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பெற்றோர் அல்லது பெரியவர்களின் துணையுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், அதிக ஒலியை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு மாவட்ட உதவி அலுவலர் வில்சன் ராஜ்குமார் எடுத்துரைத்தார். அப்போது மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி அறிந்து கொண்டு, தங்கள் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் எடுத்துரைப்பதாக உறுதியளித்தனர்.

The post ஸ்ரீ நிகேதன் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Sri Niketan School ,Tiruvallur ,District ,Officer ,Balasubramani ,Assistant ,Subramani ,Sri Niketan Matric Higher Secondary School ,Thiruvallur ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்