×

தொடர்மழையால் சதுரகிரி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

திருவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் சதுரகிரி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்றிரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நவ.10 முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடர்மழையால் சதுரகிரி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Thiruvilliputhur ,Western Ghats ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா