×

நெல்லை மாநகராட்சி ஆணையாளர், மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு

நெல்லை: நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட தியாகராஜ நகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஓட்டுனர் அழகுரத்தினம் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு அவரது வீட்டிற்காக புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.6,500 புதிய குடிநீர் இணைப்பிற்காகவும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.5,000 கட்ட வலியுறுத்தபட்டது. அதனை ஏற்று 2016-ம் ஆண்டு 2 தொகையையும் மாநகராட்சியில் செலுத்தியுள்ளார். ஆனால் புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து கேட்ட பொழுது ரூ.1,500 புதிய இணைப்பிற்காக கட்ட வேண்டும் என கூறிய நிலையில், அழகுரத்தினம் மீண்டும் பணம் செலுத்தியுள்ளார். இதனை அடுத்து அழகுரத்தினம் குடிநீர் இணைப்பிற்காக அதிகம் பணம் வசூலித்ததாக தென் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு உத்தரவு பிறபித்தார். அந்த உத்தரவில், கூடுதலாக செலுத்தபட்ட ரூ.6,500 மீண்டும் செலுத்த வேணடும் எனவும், பாதிக்கபட்ட நபருக்கு மனஉலைச்சலுக்கு ரூ.15,000, வழக்கு செலவுக்கு ரூ.3,000 சேர்த்து மொத்த தொகையும் மாநகராட்சி ஆணையும், மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல துணை ஆனையாளரும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கபட்டது.

உத்தரவு பிறப்பிக்கபட்டு பல மாதங்களாகியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையில், மீண்டும் பாதிக்கபட்ட நபர் செயலாற்று மனு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நெல்லை மாநகராட்சி நெல்லை மாநகராட்சி ஆணையாளர், மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post நெல்லை மாநகராட்சி ஆணையாளர், மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai Corporation ,Melapalayam Zone ,Commissioner ,Nellai ,Thiagaraja Nagar ,Agarruthanam ,
× RELATED பாளையங்கோட்டையில் பராமரிப்பின்றி பொலிவிழந்த மண்டல அலுவலக கட்டிடம்