×

வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கு: பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை: வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் எதிர் தரப்பைச் சேர்ந்த 17 வழக்கறிஞர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தது. முதல் குற்றவாளி மைக்கேல், 4-வது குற்றவாளி நடராஜ் மரணமடைந்துவிட்டதால் மற்ற இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பெண் வழக்கறிஞர் லோகேஸ்வரி சார்லஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கு: பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Stalin ,Chennai ,Egmore Court ,Dinakaran ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...