×

சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: எம்.பி கோரிக்கை

காரைக்குடி, நவ.7: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதுகுறித்து மனுவில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த ஏராளமானோர் சென்னை மற்றும் கோவையில் பணியாற்றி வருகின்றனர். தவிர மாணவர்கள் பலர் மேல்படிப்பிற்காக சென் னை மற்றும் கோவையில் உள்ளனர்.

இவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரான காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரைக்கு வர தீபாவளிக்கு முன்பு சென்னை, கோவையில் இருந்து புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். அதுபோல தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை, கோவை செல்ல வசதியாக இருமார்க்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்கிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

The post சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: எம்.பி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : M. B ,Karaikudi ,Railway General Manager ,Chennai ,Goa ,Diwali festival ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின்...