×

கல்லூரிகளுக்கு இடையே பேட்மிண்டன் போட்டி

 

திருச்சி, நவ.7:திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த பேட்மிண்டன் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பேட்மிண்டன் போட்டி புதுக்கோட்டை, சிவபுரம் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாணவர்களுக்கு நடைபெற்ற பேட்மிண்டன் இறுதி போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரியை 2-0 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, சிவபுரம் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி, தேசிய கல்லூரியை 2-0 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

The post கல்லூரிகளுக்கு இடையே பேட்மிண்டன் போட்டி appeared first on Dinakaran.

Tags : Inter College Badminton Tournament ,Trichy ,Bishop Heber College ,Inter-College Badminton Tournament ,Trichy.… ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்