×

களக்காடு கல்லூரியில் வன உயிரின வார விழா

களக்காடு, நவ.7: களக்காடு செயிண்ட் ஜோசல் கல்வியியல் கல்லூரியில் வன உயிரின வார விழா நடந்தது. கல்லூரி நிறுவன தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். களக்காடு சூழல் திட்ட வனச்சரகர் முகுந்தன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் குமரேசன் வரவேற்றார். இதில் உதவிப் பேராசிரியர் தயாள தனலெட்சுமி, ஜோசப் மெட்ரிக் பள்ளி தலைவர் கிங்ஸ்லி மோசஸ், சூழல் திட்ட வனவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post களக்காடு கல்லூரியில் வன உயிரின வார விழா appeared first on Dinakaran.

Tags : Wildlife Week ,Kalakadu College ,Kalakadu ,St.Josal ,College of Education ,Kalakadu College Wildlife Week Festival ,Dinakaran ,
× RELATED அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால்...