×

ஆரல்வாய்மொழி போலீசில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், நவ.7: ஆரல்வாய்மொழி, திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முருகன்(43) என்பவர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; நான் திருவள்ளுவர் காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். கேபிள் தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி ஹேமலதா மகா சேமம் என்ற மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வருகிறார். மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்றவர் சரியாக குழு கடன் கட்டுவது கிடையாது, தலைவி என்ற முறையில் எனது மனைவி தொடர்ந்து வற்புறுத்தி வரவே கட்டியுள்ளார். குழு கடன் தொகையை முழுவதும் செலுத்த கேட்ட நிலையில் சிறுவனை தாக்கியதாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post ஆரல்வாய்மொழி போலீசில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Aralwai Mozhi ,Nagercoil ,Murugan ,Tiruvalluvar Colony ,Aralvaimozhi ,Kumari District Collector ,Dinakaran ,
× RELATED காஸ் சிலிண்டர் விலையேற்றம் எதிரொலி...