×

எடப்பாடி மீது தேர்தல் ஆணையத்தில் புது புகார்

புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்,‘‘கடந்த 2017க்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சி மற்றும் அதன் கொடி ஆகியவற்றை ஏமாற்று வேலை செய்து சொந்தம் கொண்டாடி தன்னை முன்னிலை படுத்திக்கொள்கிறார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் என்றும் தன்னை கூறிக் கொள்கிறார். பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் உத்தரவு பிறப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் அதிமுக கட்சி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறிவரும் எடப்பாடி பழனிசாமி மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

The post எடப்பாடி மீது தேர்தல் ஆணையத்தில் புது புகார் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Election Commission ,New Delhi ,O. Panneerselvam ,Bhujawendi ,Chief Election Commission ,AIADMK ,General Secretary ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி வங்கிகள், தபால்...